ஜோகோவிச்சின் "விசா"வை மீண்டும் ரத்து செய்தது ஆஸ்திரேலிய அரசு.!
கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்துள்ளது.
ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க வந்த ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் விசா மறுக்கப்பட்டு தஞ்சமடைவோருக்கான விடுதியில் தங்க வைக்கப்பட்டார். பின்னர் நீதிமன்றத் தலையீட்டால் அங்கிருந்து வெளியேறி டென்னிஸ் பயிற்சி மேற்கொள்ளத் தொடங்கினார்.
இந்நிலையில் அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் ஜோகோவிச்சால் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் பொதுநலன் கருதி அவரது விசா-வை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம்களை வென்று சாதனை படைக்க காத்திருந்த ஜோகோவிச்சிற்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இதனை எதிர்த்து ஜோகோவிச் மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளார்.
Comments